/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : அக் 18, 2025 08:00 AM

புதுச்சேரி: உருளையன் பேட்டை சாரதி நகரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை நேரு எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சாரதி நகர் 1 முதல் 4வது வீதி வரை நகராட்சி மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 35 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜை செய்து சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி, மனித நேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.