/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
பாகூரில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூரில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூரில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மார் 19, 2025 05:25 AM

பாகூர்: பாகூர் தொகுதியில் ரூ. 72.17 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கால்நடை மருத்துவமனை கட்டடம் ரூ. 22.66 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கவும், சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி பழைய சமையல் கூடத்தை ரூ. 49.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்து, பல்நோக்கு கூடமாக மாற்றவும், பழுதான சுற்றுசுவரை புதியதாக அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இப்பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் கலைச்செல்வன், சிறப்பு கட்டட பிரிவு இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ் கலந்து கொண்டனர்.