UPDATED : ஜூலை 28, 2026 07:36 PM
ADDED : ஜூலை 28, 2026 07:23 PM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் நீர் நிலைகள் துார்வாரும் பணியை ரவிகுமார் எம்.எல்.ஏ., துவங்கிவைத்தார்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத 125 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவம் சார்பில் ரூ.54 லட்சம் திட்ட மதிப்பீட்டில் திட்ட பணிகள் துவக்க விழா நடந்தது.
வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு கிழக்கு பகுதியில் உள்ள நசுக்கறு குளம், வி.மணவெளி திருவேணி நகரில் உள்ள வண்ணான் குளம் மற்றும் அனந்தம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள குளம் என தொகுதியில் மூன்று குளங்கள் துார்வாரும் பணிகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர்கள் அஸ்வின்குமார் மற்றும் செங்கதிர், பணி ஆய்வாளர் மாறன், திட்ட ஊழியர்கள் பாலசுப்ரமணி, கலைச்செல்வி, திரிபுரசுந்தரி, கிராமத் திட்ட ஊழியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
