/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 14, 2025 03:37 AM

திருபுவனை : சோரப்பட்டு காலனியில் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் 'பேட்கோ' சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு காலனி மாரியம்மன்கோயில் வீதியில் ரூ.22.43 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி மற்றும் அங்காளபரமேஸ்வரி கோவில் மற்றும் கருமகாரிய கொட்டகைக்கு செல்லும் சாலைக்கு ரூ.28.78 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது.
விழாவில் எம்.எம்.எல்.ஏ., அங்காளன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பேட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளைநிலை பொறியாளர் திருவருட்செல்வன் ஒப்பந்ததாரர்கள் சாய் புவனா கன்ஸ்ரக் ஷன், ராமையன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.