/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்படுத்தும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை மேம்படுத்தும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 26, 2025 08:13 AM

திருபுவனை : சோரப்பட்டு கிராமத்தில் ரூ. 31 லட்சம் செலவில் சாலை மேம்படுத்தும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
பு துச்சேரி திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 31 லட்சம் செலவில் சோரப்பட்டு கிராமத்தில் சுடுகாட்டு சாலையை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் மனோகரன், ஒப்பந்ததாரர் மகா கன்ஸ்ட்ரக் ஷன் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.