/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனையில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
திருபுவனையில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
திருபுவனையில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
திருபுவனையில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 03, 2026 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், திருபுவனை சிவசக்தி நகர், செல்வகணபதி நகர் மற்றும் ராதாகிருஷ்ணன் நகர் உட்புற சாலைகளுக்கு ரூ.46.10 லட்சம் செலவில் கருங்கல் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
அன்னை வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி அருகில் அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் மனோகரன், பாஸ்கரன், ஒப்பந்ததாரர் குணசேகரன், லட்சிய ஜனநாயக கட்சியின் தொகுதி தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.