ADDED : ஜன 03, 2026 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: போதையில் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இ.சி.ஆரில் தனியார் மருத்துவமனை அருகே வாலிபர் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், முதலியார்பேட்டை, அவ்வை நகரை சேர்ந்த அஜய், 27; என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், மேட்டுபாளையம் ஐ.டி.ஐ., சாலையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட முத்திரையர்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், 41, என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

