ரூ. 72 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 72 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
UPDATED : ஜூலை 16, 2026 06:23 PM
ADDED : ஜூலை 16, 2026 06:16 PM
வில்லியனுார்: ஒதியம்பட்டில் 72 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வில்லியனுார் அடுத்த ஓதியம்பட்டு மகேஸ்வரி நகர் மற்றும் விஸ்வேஷ்வரி நகர் பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்னையை போக்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில், 29 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
அப்பகுதியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் விநியோக குழாய்கள், வீட்டு குடிநீர் இணைப்புகள் மற்றும் சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆழ்துளை கிணறு நீர் மோட்டாரை ரவிக்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, உதவிப் பொறியாளர் ரமேஷ்குமார், இளநிலைப் பொறியாளர் ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
