தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வ.உ.சி. பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வ.உ.சி. பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வ.உ.சி. பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


UPDATED : ஜூலை 01, 2026 08:47 PM

ADDED : ஜூலை 01, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 08:47 PM ADDED : ஜூலை 01, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கல், மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதிப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். துணை முதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கி, ஆதார் அட்டை புதுப்பித்தல் பணியை துவக்கி வைத்து, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்து பேசினார். பொறுப்பாசிரியர் பத்மாவதி முன்னிலை வகித்தார். தமிழ் விரிவுரையாளர் கிரிஜா தொகுப்புரையாற்றினார்.

தமிழ் ஆசிரியர் ராஜி ஜிதேந்திரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us