/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதி மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
தொகுதி மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 01, 2025 02:29 AM

பாகூர்: பாகூர் தொகுதியில், 71 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர், கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பாகூர் தொகுதி, வார்க்கால் ஓடை சால் கார்டனில், 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவிலும், மதிகிருஷ்ணா புரம் வேல்நகர், அண்ணா மலை நகர், சுள்ளியாங் குப்பம் வெங்கடேசன் நகர் ஆகிய பகுதிகளில் 3 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயிலும், இருளஞ்சந்தை டி.ஆர்.நகர் மற்றும் வி.ஓ.சி., நகரில்3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயில் குடிநீர் குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில், 67 லட்ச ரூபாய் செலவில், பாகூரில் உள்ள தாலுகா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பாகூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலக கட்டடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ.,பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், துணை தாசில்தார் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.