/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரம் வளர்ப்பு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
மரம் வளர்ப்பு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 24, 2024 04:21 AM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் திட்டத்தை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம் பசுமை இயக்கம் இணைந்து வில்லியனுார் தொகுதி, ஒதியம்பட்டு பகுதியில் வீட்டுக்கு ஒரு மரம், தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை சிவா எம்.எல்.ஏ., மகளிர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகள் ரமேஷ், ஜூனியர் இன்ஜினியர் பிரபு, திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சாந்தலட்சுமி, தினேஷ், விமல் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

