/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி பெண் அமைச்சருக்கு டார்ச்சர் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டும் எம்.எல்.ஏ., நாஜிம் கோரிக்கை

ADDED : செப் 02, 2025 03:22 AM

புதுச்சேரி: பெண் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்காவை டார்ச்சர் செய்த அமைச்சர் யார் என்பது குறித்து, கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என காரைக்கால் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, காரைக்காலில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா கூறிய புகாரை உட்கட்சி விவகாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் காரைக்கால் எம்.எல்.ஏ., என்ற காரணத்தினால், நாங்கள் கட்சியைத் தாண்டி அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதிமன்றமே யார் அந்த சார் என்று கேட்டது போல, தற்போது காரைக்காலில் பெண் எம்.எல்.ஏவை டார்ச்சர் செய்த அமைச்சர் யார்?
தன்னை அவமதித்த அதிகாரியின் பெயரையும், டார்ச்சர் செய்த அமைச்சர் யார் என்றும் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., கூற வேண்டும். மேலும், டார்ச்சர் செய்த அமைச்சர் யார்...? மிரட்டிய அதிகாரி யார்..? என சபாநாயகர் கேட்டு அறிய வேண்டும். எம்.எல்.ஏ.,விற்கே, பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். இந்த விஷயத்தில், கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.