கதிர்காமம் தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு
கதிர்காமம் தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு
ADDED : ஜூலை 13, 2026 02:50 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
கதிர்காமம் தொகுதி, மேட்டுப்பாளையம் பகுதி யில் அமைந்துள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு நேற்று கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா நடந்தது.
விழாவில் அழகானந்தம் எம்.எல்.ஏ., குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கதிர்காமம் தொகுதி முக்கியஸ்தர்கள், என்.ஆர்.காங்., பொது செயலாளர் ஜெயபால், பொருளாளர் வேல்முருகன், இளைஞர் அணி மாநில பொது செயலாளர் பூவரசன், மாரிமுத்து மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அழகு அறக்கட்டளையை சேர்ந்த வர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அழகா னந்தம் எம்.எல்.ஏ., தனது பணியை தொடங்கி அரசு கோப்பில் கையெழுத்திட்டார்.
