தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வீடு கட்ட தவணை தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

வீடு கட்ட தவணை தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

வீடு கட்ட தவணை தொகை எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஜன 10, 2024 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் தொகுதியை சேர்ந்த வீடு கட்டும் திட்டத்தில் 63 பயனாளிகளுக்கு, 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தவணை தொகைக்கான ஆணையினை செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம், பாகூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தவணை தொகைக்கான ஆணை வழங்கிடும் நிகழ்ச்சி பாகூரில் நடந்தது.

செந்தில்குமார் எம்.எல். ஏ., 63 பயனாளிகளுக்கு தலா 1. 20 லட்ச ரூபாய் வீதம் 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் முதல் தவணை தொகைக்கான ஆணையினை வழங்கினார். குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் சுதர்சன், இளநிலை பொறியாளர் கோபிநாத், பணி ஆய்வாளர் பட்டாபிராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us