தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடிப்படை வசதிகள் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

அடிப்படை வசதிகள் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

அடிப்படை வசதிகள் கேட்டு எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை


UPDATED : அக் 14, 2026 07:51 PM

ADDED : அக் 14, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:51 PM ADDED : அக் 14, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோர்க்காடு வெங்கட்டா நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,விடம், கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், மோகன்தாஸ் எம்.எல்.ஏ.,விடம் அளித்துள்ள மனு;

ஏம்பலம் தொகுதி கோர்க்காடு வெங்கட்டா நகரில் ஏராளமான குடும்பங்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் நகரில், குடிநீர் குழாய் இணைப்பு, கழிவு நீர் வாய்க்கால், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது.

மழைக் காலங்களில் சேரும் சகதியுமான பாதையில் சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால், இங்கு வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால், எங்கள் நகர் பகுதியில் குடிநீர், கழிவு நீர் வாய்க்கால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us