UPDATED : அக் 14, 2026 07:51 PM
ADDED : அக் 14, 2026 07:47 PM

பாகூர்: 38 வது தேசிய அளவிலான சப் ஜூனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 17 ம் தேதி துவங்கி வரும் 21ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பக்வாராவில் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி சார்பில் சிறுவர் அணியில் ரக் ஷன்குமார், நிஷாந்த், ஹரிஷ் ராமன், பிரதீபன், மனோஜ், ரகாவ்காஜிஹா தீபன்மஞ்சினி ஆகியோரும் சிறுமியர் அணியில் திவ்யாஸ்ரீ, சுவாதி, நிரோஷா, யாழினி, சாருமதி, பூஜா ஆகியோர் பஞ்சாப் புறப்பட்டனர்.
இவர்களுடன், பயிற்சியாளர்களாக கரிகாலன், வரதராசு, மேலாளர்களாக தண்டபாணி, தேன்மொழி, ஒருங்கிணைப்பாளராக செல்வக்குமார், சங்க செயலாளர் தினேஷ்குமார் ஆகியோரும் சென்றனர். முன்னதாக, புதுச்சேரி மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்கத்தின் தலைவர் ராமு, தொழிலதிபர் நடராஜன் ஆகியோர் வீரர்களை வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தனர்.
