தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வடிகால்களை துார் வர எம்.எல்.ஏ., கோரிக்கை

வடிகால்களை துார் வர எம்.எல்.ஏ., கோரிக்கை

வடிகால்களை துார் வர எம்.எல்.ஏ., கோரிக்கை


UPDATED : அக் 18, 2026 07:27 PM

ADDED : அக் 18, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:27 PM ADDED : அக் 18, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்தில் இருந்ததை விட தற்போது வடிகால்வாய்க்கால்களின் தரம் குறைந்துள்ளதாக விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி லோக் நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்திப்புக்கு பின், அவர், கூறியதாவது:

புதுச்சேரியில், கடந்த 16ம் தேதி இரவு 9:30 முதல் 12:30 மணி வரை 9.6 செ.மீ., அளவு மழை பெய்ததாக வானிலை அறிக்கை கூறுகிறது. நான் சட்டசபையில், மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன் ராஜ்பவன் தொகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களை துார்வார வேண்டும் என, பேசி இருந்தேன். ராஜ்பவன் தொகுதிட்பட்ட கணேஷ் நகர், பாப்பம்மாள் கோவில் தெரு, அக்காசமி கோவில் பகுதிகளில், நீண்ட நாட்களாக நடந்து வந்த சாலை அமைக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் இடுப்பு வரைக்கும் மழை தண்ணீர் நிற்கும். தொகுதியில் உள்ள சிறிய வாய்க்காலிருந்து, பெரிய வாய்க்கால் வரை துார் வார வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கவர்னரிடம் வைத்துள்ளேன். பொதுப்பணித் துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்த வேண்டும். பிரெஞ்சு காலத்தில் இருந்ததை விட தற்போது வாய்க்கால்களின் தரம் குறைந்துள்ளது.

நான் மழையில் பாதிப்புகள் குறித்து வீடியோ எடுத்து விளம்பரம் தேடுவதாக சார்லஸ் மார்டின் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் மக்களுடன் இருப்பது ஆங்டிங்னா, அதை நான் தொடர்ந்து செய்வேன். புதுச்சேரியை சிங்கபூராக மாற்ற தேவையில்லை. பழை புதுச்சேரியாகத் தான் மாற்ற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us