தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாய்க்கால் பராமரிப்பு மோசமாக உள்ளது: நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

வாய்க்கால் பராமரிப்பு மோசமாக உள்ளது: நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

வாய்க்கால் பராமரிப்பு மோசமாக உள்ளது: நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு


UPDATED : அக் 18, 2026 07:27 PM

ADDED : அக் 18, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:27 PM ADDED : அக் 18, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக நேரு எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லித்தோப்பிலிருந்து மறைமலை அடிகள் சாலை, கடலுார் சாலை வழியாக உப்பனாறு வாய்க்காலுக்கு செல்லும் வடிகால் வாய்க்கால், போதிய பராமரிப்பு இல்லாதததால், மிகவும் சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இரு தினங்களுக்கு முன் பெய்த மழையின் போது தண்ணீர் வடிய வழியின்றி அப்பகுதிகளில் தேங்கி நின்றதால், பொது மக்களுக்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

பாதாள சாக்கடை திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, கழிவுநீரே கலக்காத வகையில் புதிய வடிகால் வாய்க்கால் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கடலுார் சாலை மற்றும் வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கப் பகுதிகளில் வாய்க்கால் பணிகள் முழுமை பெறாமல் பாதில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் அதனை சரியாக பராமரிக்க தவறியதே முக்கியக் காரணமாகும்.

எனவே, வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம் மற்றும் கடலுார் சாலைப் பகுதிகளில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us