/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச பஸ் பாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
இலவச பஸ் பாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 19, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : சட்டசபை கேள்வி நேரத்தில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., பேசியதாவது:
முதல்வரின் தொலைநோக்கு பார்வையால் தான் இன்றைக்கு மாணவர்கள் இங்கேயே படிக்க முடிகின்றது. காமராஜர் கல்வி திட்டம் தான் மாணவர்களின் கனவை நனவாக்கி வருகின்றது. ஒன்பது மருத்துவக்கல்லுாரிகள், 15 இன்ஜினியரிங் கல்லுாரி என புதுச்சேரி கல்வி வளர்ச்சியடைந்துள்ளது. பல இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்காக இலவச பஸ் பாஸ் கொடுக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது இருமுறை இலவச பஸ்சில் சென்றுவர வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்.