sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உயிர்காக்கும் காவலர்கள் நியமிக்க கவர்னரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை

உயிர்காக்கும் காவலர்கள் நியமிக்க கவர்னரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை

உயிர்காக்கும் காவலர்கள் நியமிக்க கவர்னரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : டிச 24, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புத்தாண்டு பிறப்பதற்குள் உயிர்காக்கும் காவலர்களை நியமித்து, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலாவிற்கான வலைதள தேடலில் புதுச்சேரி உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக பெருமை கொள்ளும் சுற்றுலாத் துறை அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் உள்ளது.

புதுச்சேரி கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் பலியாகி கொண்டிருக்கின்றனர்.

இதுபற்றி நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக கடலில் இறங்குவோரை தடுக்கும் விதமாக உயிர் காக்கும் காவலர் பணிக்கு 34 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆக., 7ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக பணி ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு பணிகள் தராமல் சம்பந்தப்பட்ட துறையினர் அலைகழித்து வருகின்றனர்.

புத்தாண்டு பிறப்பதற்குள் கடலோர பகுதிகளில் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிர் காக்கும் காவலர்களை பணி அமர்த்தி, சுற்றுலா பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us