/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிசை மாற்று ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : மார் 20, 2025 04:41 AM
புதுச்சேரி: சட்டசபை கூட்டத்தொடர் பூஜை நேரத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தில் பணி செய்யும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் அறிவித்துள்ளார்கள். பிரதமர் பெயரில் அதிகமான மாநில நிதி ஒதுக்கி சிறப்பான ஒரு திட்டமான கல்வீடு கட்டிக் கொடுப்பதை செய்து வருகின்றனர்.
ஆனால் அந்தத் திட்ட பணியை செய்பவர்களுக்கு முறையான சம்பளம் உரிய காலத்துக்குள் கொடுக்காதது மிகவும் சங்கடத்திற்கு இடமாக இருக்கிறது.
வீடு கட்டி மக்கள் நன்றாக இருக்கும்போது வீடு கட்ட பணி செய்பவர்கள் அன்றாடம் கஷ்டப்படும் சூழலில் உள்ளனர்.
எனவே இதில் இருக்கக்கூடிய நிர்வாக சிக்கலை போக்கி, ஏழாவது சம்பளம்குழு பரிந்துரை, எம்.ஏ.சி.பி., மற்றும் பணி நிரந்தரம் ஆகியவற்றை உடனடியாக செய்ய வேண்டும்.