/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுல்தான்பேட்டை குளம் சீரமைப்பு பணி சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
/
சுல்தான்பேட்டை குளம் சீரமைப்பு பணி சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
சுல்தான்பேட்டை குளம் சீரமைப்பு பணி சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
சுல்தான்பேட்டை குளம் சீரமைப்பு பணி சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
ADDED : ஆக 19, 2025 07:51 AM

வில்லியனுார் : சுல்தான்பேட்டையில் பொதுப்பணி துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் குளம் நவீனபடுத்துதல் மற்றும் பயணியர் நிழற்குடை அமைக்கும்பணியை எதிர்க்கட்சித் தலைவர் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் பழமை வாய்ந்த குளம் நவீன படுத்த புதுச்சேரி பொதுப்பணிதுறை நீர்பாசன கோட்டம் சார்பில் ரூ.1:99 கோடி செலவில் சர்வதேச தரத்தில் குளத்தை சீர்செய்து, நடைபாதை, இருக்கைகள் வசதி மின் விளக்குகளுடன் பூங்கா வசதிகளை ஏற்படுத்தவும் மற்றும் ரூ.5:91 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுல்தான்பேட்டை மெயின் ரோட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கும் நேற்று காலை பூமி பூஜை விழா நடந்தது.
விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா குளம் புதுப்பிக்கும் பணி மற்றும் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் லுாய் பிரகாசம், இளநிலைப் பொறியாளர் கணேஷ், ஒப்பந்ததாரர் மனோகர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள், தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

