தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பஸ்களை உரிய வழித்தடத்தில் இயக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பஸ்களை உரிய வழித்தடத்தில் இயக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பஸ்களை உரிய வழித்தடத்தில் இயக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


UPDATED : நவ 14, 2026 05:32 PM

ADDED : நவ 14, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 05:32 PM ADDED : நவ 14, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏர்போர்ட் சாலையில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர், கோரிமேடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்துள்ள மனு;

தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட ஏர்போர்ட் சாலையில் இயக்கப்படும் தனியார் பஸ்கள், லதா ஸ்டீல் சிக்னல் வழியாகச் சென்று, கொக்கு பார்க், முருகா தியேட்டர் வழியாக கோரிமேடு சென்றடைய வேண்டும்.

ஆனால், சில தனியார் பஸ்கள் நாவலர் பள்ளி முதல் லதா ஸ்டீல் சிக்னல் ஈ.சி.ஆர்., வழியாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித் தடத்தில் செல்லாமல், பார்வதி திருமண மண்டபம் வழியாக திரும்பி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் மற்றும் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக காமராஜர் சாலையை அடைந்து கோரிமேடு செல்கின்றன.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கும், போக்குவரத்து இடையூறுகளுக்கும் ஆளாகின்றனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

அதேபோல், நாவலர் பள்ளி முதல் லதா ஸ்டீல் சிக்னல் வரை அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us