/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் செலவுக்கு எங்கே போவது நிதி கிடைக்காமல் தவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
/
தேர்தல் செலவுக்கு எங்கே போவது நிதி கிடைக்காமல் தவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
தேர்தல் செலவுக்கு எங்கே போவது நிதி கிடைக்காமல் தவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
தேர்தல் செலவுக்கு எங்கே போவது நிதி கிடைக்காமல் தவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : செப் 28, 2025 07:54 AM
சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள பலர் தேர்தலில் போட்டியிட செலவாகும் பணத்தை தயார் செய்ய முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள சிலர் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் பொருட்களை வாரி, வழங்கி வருகின்றனர். இதன் எதிர்பார்ப்பு அனைத்து தொகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் பலர் அப்போது வாங்கிய கடனுக்கான வட்டியை கூட சரியாக கட்ட முடியாமல் இன்று வரை தவித்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இதற்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் மன அழுத்தத்தில் சிக்கி உள்ளனர். இவர்களின் தேர்தல் கனவிற்கு வெடி வைக்கும் வகையில் புதிதாக போட்டியிட களத்தில் குதித்துள்ள சிலர் பரிசுகள், வீட்டுக்கு உபயோக பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தாறுமாறாக வாரி வழங்கி வருகின்றனர்.
இவர்களால் கலக்கமடைந்துள்ள முன்னாள் மற்றும் தற்போது பதவியில் உள்ள சில எம்.எல்.ஏ.,க்கள் தேர்தல் செலவிற்கு என்ன செய்வது என, தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். சராசரியாக ஒரு வேட்பாளர் தொகுதிக்கு குறைந்தபட்சம் ௫ கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய சூழல் புதுச்சேரியில் தற்போது நிலவி வருகிறது.
எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எத்தனை ஆண்டுகள் அந்தக் கட்சியில் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் பூத் தொகை அவருக்கு ஒரு நாள் கிடைக்காவிட்டாலும், மறுநாளே அந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக எதிரணியுடன் இணைந்து வேலை செய்ய தொடங்குவர்.
இதுபோன்ற உள்ளடி வேலைகளால் ஜெயிக்க வேண்டிய சில எம்.எல்.ஏ.,க்கள் தோற்ற வரலாறுகளும் புதுச்சேரியில் உள்ளது. தேர்தலுக்கு செலவு செய்தால் மட்டுமே கரையேர முடியும் என்ற நிலையை அனைத்துக் கட்சிகளும் வாக்காளர்களிடையே ஏற்படுத்தி விட்டன.
அதன் பலன் பணம் இல்லாதவர்கள் போட்டியிட அஞ்சும் நிலை புதுச்சேரியில் உருவானது தான் உச்சக்கட்ட சோகம். என்ன செய்யப் போகிறார்கள் போட்டியிட விரும்புகிறவர்கள்?