/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ., பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து
/
எம்.எல்.ஏ., பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து
ADDED : செப் 23, 2025 07:45 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினார்.
பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., விற்கு முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம், புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், கல்யாணசுந்தரம், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மணக்குள விநாயகர் கல்வி குழும செயலாளர் நாராயணசாமி, முன்னாள் சேர்மன் பாஸ்கரன், அக்ரி கணேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தொகுதி ஊர் பிரமுகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக மனக்குள விநாயகர் கோவிலில், கவுசிக பாலசுப்ரமணியர், லாஸ்பேட்டை சாய்பாபா கோவில், முத்தியால்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவில், சுப்ரமணியசுவாமி கோவில், முத்துரட்சகர் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் குடும்பத்துடன் பங்கேற்றார். முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த தங்கத்தேர் நிகழ்ச்சயில் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகம் எதிரில் தொகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் திருமண மண்டபத்தில் விருந்து அளிக்கப்பட்டது.