/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு தொழிலாளர்கள் சம்பள விவகாரம் தலைமை செயலர் வீட்டை எம்.எல்.ஏ., முற்றுகை

ADDED : ஆக 26, 2025 06:45 AM

புதுச்சேரி : துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து, தலைமை செயலர் வீட்டை, எம்.எல்.ஏ., முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்கள் சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., விடம், நேற்று காலை முறையிட்டனர்.
உடன் அவர் தனது மனைவி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் 50 பேருடன், கோரிமேடு இந்திரா நகரில் உள்ள தலைமை செயலர் சரத் சவுகான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று எம்.எல்.ஏ.,விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எம்.எல்.ஏ., துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து தலைமை செயலரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ., அவரது மனைவி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சிலர் மட்டும், தலைமை செயலரை சந்தித்து பேசினர். அப்போது, வரும் 29ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என தலைமைச் செயலர் உறுதியளித்தார்.
அதனையேற்று எம்.எல்.ஏ., மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.