/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை
/
வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : நவ 23, 2024 06:08 AM

புதுச்சேரி: உப்பளம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலனுடன் ஆலோசனை நடத்தினார்.
உப்பளம் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், அனிபால் கென்னாடி எம்.எல்.ஏ., செயற்பொறியாளர் சிவபாலன், இளநிலை பொறியாளர் நமச்சிவாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள குபேர் திருமண மண்டபம் புனரமைப்பு, வம்பாகீரப்பளையம் - இ.சி.ஆர்., வழியாக கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, ரூ. 3 கோடி செலவில் கடலுார் சாலை - உப்பனாறு வாய்க்கால் சீரமைப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம், நேதாஜி நகரில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நகராட்சி மருத்துவர் ஆர்த்தியிடம், தொகுதியில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டது.