/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையில் முறைகேடு கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு

ADDED : செப் 25, 2024 04:09 AM
புதுச்சேரி : பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்த உதவித் தொகையை கல்லுாரி நிர்வாகங்கள் வழங்க வேண்டி, கவர்னரி டம், அங்காளன் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.
மனு விபரம்:
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் முதுநிலை மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி, மத்திய அரசு மாதாந்திர உதவித்தொகையாக, இளங்கலை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு, ரூ.20 ஆயிரம், முதுகலை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு, ரூ.43 ஆயிரமும் வழங்க, புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனரகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆனால், மருத்துவக்கல்லுாரிகள் இந்த உத்தரவை பின்பற்றாமல், ஜூனியர் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு, ரூ.10 ஆயிரமும், முதுகலை பயிற்சியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் என, நேரடி நிதி பரிமாற்ற முறையை தவிர்த்து, மோசடி 'வவுச்சர்'களில், கையெழுத்திட, மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது.
அரசு நிர்ணயித்த உதவித் தொகையை, மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகங்கள் வழங்க, கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.