/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்தை வலியுறுத்தி எம்.எல்.ஏ., ராஜினாமா கடிதம்
/
மாநில அந்தஸ்தை வலியுறுத்தி எம்.எல்.ஏ., ராஜினாமா கடிதம்
மாநில அந்தஸ்தை வலியுறுத்தி எம்.எல்.ஏ., ராஜினாமா கடிதம்
மாநில அந்தஸ்தை வலியுறுத்தி எம்.எல்.ஏ., ராஜினாமா கடிதம்
ADDED : ஜூலை 10, 2025 05:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் நியமன விவகாரத்தில், கவர்னர் கைலாஷ்நாதன் - முதல்வர் ரங்கசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, 'அதிகாரம் இல்லாத பதவி தேவையில்லை எனவும், ராஜினாமா செய்வதாகவும் முதல்வர் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், கவர்னர் - முதல்வர் மோதலால் புதுச்சேரி மக்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, சட்டசபை கட்டட படிக்கட்டில் அமர்ந்து, நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பல்வேறு பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன. நேரு எம்.எல்.ஏ., தர்ணா போராட்டத்தை மாலை 6:00 மணியளவில் விலக்கி கொண்டார்.
இதனிடையே, முதல்வரின் ராஜினாமா எண்ணம் தொடர்பாக, ஹோட்டல் அண்ணாமலையில் ஆலோசனை கூட்டம் நடத்திய என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ.,க்கள், மதியம் 2:00 மணியளவில் சபாநாயகரை சந்திக்க சட்டசபைக்கு வந்தனர். அப்போது சட்டசபை வளாகத்தில், தர்ணா போராட்டம் நடத்திய நேரு எம்.எல்.ஏ.,வை, என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.
அப்போது திடீரென தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் நேரு எம்.எல்.ஏ.,வழங்கினார். மாநில அந்தஸ்திற்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கடிதத்தை முதல்வரிடம் வழங்கும்படி கூறினார்.
இதேபோல் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் தங்களது பதவிகளை, ராஜினாமா செய்துவிட்டு, மாநில அந்தஸ்திற்காக களம் இறங்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டார்.