தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி நீதிமன்றத்தில் நடமாடும் இ–சேவை மையம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடமாடும் இ–சேவை மையம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடமாடும் இ–சேவை மையம்


ADDED : நவ 11, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 06:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் நடமாடும் இ–சேவை மையம் இன்று (நவ.,11) துவக்கி வைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களுக்கு பொது மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் இ–சேவை வாகனங்கள் சோதனை அடிப்படையில் இயக்க அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இ சேவை மைய வாகனம் துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. தலைமை நீதிபதி ஆனந்த் கொடியசைத்து வாகனத்தை துவக்கி வைத்தார்.

நீதிபதிகள் சந்திரசேகர், ஜெயவேல், யஷ்வந்த் ராவ், சவுந்தர்யா, வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இ சேவை வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு சட்ட உதவிகள், இ பைலிங் சேவைகள், வாய்தா தேதி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கில் ஆஜராகும் வசதிகள் உள்ளது குறிப்பிடதக்கது.

இந்த சோதனை வெற்றியடைந்தால், நிரந்தரமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் புதுச்சேரியின் பல பகுதிகளில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us