UPDATED : நவ 11, 2026 06:02 PM
ADDED : நவ 11, 2026 06:00 PM

புதுச்சேரி: முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழை, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் மாணவர்களுக்கு வழங்கினார்.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஆசிரியை பரிமளா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் II சுப்ரமணியன் நன்றி கூறினார்.
