UPDATED : நவ 11, 2026 06:02 PM
ADDED : நவ 11, 2026 06:00 PM

புதுச்சேரி: அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறுவதையொட்டி, தேர்வு நடந்தது.
ஜெய்ப்பூரில் அடுத்த மாதம் 1 முதல் 5ம் தேதி வரை டேக்வாண்டோ போட்டி நடைபெற உள்ளது. அதையொட்டி, புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லுாரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி தேர்வு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு ஸ்பேரிங் மற்றும் பூம்சே பிரிவுகளில் தேர்வு நடந்தது. ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் இளையராஜா புதுச்சேரி உடற்கல்வி உதவி பேராசிரியர் சிவச்சந்திரன் செய்திருந்தனர்.
பயிற்சியாளர் சிட்டிபாபு, சர்வதேச நடுவர்கள் தினேஷ்குமார், செல்வமுத்து தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆதவன், உதயச்சந்திரன், அங்காளன், சாமுவேல், ஜேசுதாஸ் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.
