ADDED : நவ 11, 2026 06:00 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று (நவ.,11) கொண்டாடப்பட்டது.
வட்டம் -3 பள்ளித் துணை ஆய்வாளர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி வரவேற்றார்.
ரோட்டரி சங்கம் புதுச்சேரி சாம்பியன்ஸ் சார்பில் இவ்விழாவையொட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் ஜாபர், செயலாளர் பகுத்தறிவு, பொருளாளர் ராஜவேலு, சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
