ADDED : மார் 24, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரையில் தவறவிட்ட மொபைல் போனை, கடலோர காவல்படையினர், உரியவரிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, பாண்டி மெரினா கடற்கரையில் கடலோர காவல்படை போலீசார் கடந்த 20 தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் கீழே கிடந்த, விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்றை, பொதுமக்கள் எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலோர காவல்படையினர்,விசாரித்தபோது, தமிழக பகுதியான கண்டமங்கலத்தை சேர்ந்த லட்சுமி என்பவருடையது என தெரியவந்தது.இதையடுத்து, லட்சுமியிடம், மொபைல் போனை போலீசார் ஒப்படைத்தனர்.