தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மொபைல் போன் மீட்டு ஒப்படைப்பு

மொபைல் போன் மீட்டு ஒப்படைப்பு

மொபைல் போன் மீட்டு ஒப்படைப்பு


ADDED : அக் 26, 2026 08:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 08:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை பாறையில் விழுந்த சுற்றுலா பயணிகளின் மொபைல் போனை லைப் கார்டு ஊழியர்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 10 கல்லுாரி மாணவர்கள் இன்று (அக்.,26) புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அப்பொழுது கடற்கரை சாலை, காந்தி சிலை பின்புறம் உள்ள பாறை கற்கள் மீது அமர்ந்து செல்பி எடுத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களின் ஒருவர் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன் ஒன்று தவறி பாறைக்குள் விழுந்தது.

அதனை எடுக்க முடியாததால், கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த லைப் கார்டுகளான ரமேஷ், விக்ரம், சுந்தர், பிரவீன் ராஜ் ஆகியோரிடம் உதவி கேட்டனர்.

இதையடுத்து, லைப் கார்டுகள் இணைந்து, பாறைக்குள் விழுந்து சிக்கிய மொபைல் போனை 2 மணி நேரம் போராடி எடுத்து தவறவிட்ட கல்லுாரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர்.

்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us