/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறையில் மொபைல் போன், புகையிலை பறிமுதல்
/
சிறையில் மொபைல் போன், புகையிலை பறிமுதல்
ADDED : நவ 23, 2024 05:36 AM
புதுச்சேரி, : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதி அறை, கழிப்பிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 மொபைல் போன்கள், புகையிலை பொருட்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அங்கு, கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், சிறை அதிகாரிகள் கடந்த 18 ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விசாரணை கைதிகள் அறை அருகே பொது கழிப்பிடத்தில் 3 பிளாஸ்டிக் கவர்களில் மொபைல் போன், பேட்டரி, சார்ஜர், புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது.
மேலும், மங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கைதி மதன் அறையில் சோதனை செய்தபோது, அவர் மொபைல் போன் ஒன்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 2 மொபைல் போன், பேட்டரி, சார்ஜர், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.