/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 3ம் தேதி துவக்கம்
/
10வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 3ம் தேதி துவக்கம்
10வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 3ம் தேதி துவக்கம்
10வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி தேர்வு 3ம் தேதி துவக்கம்
ADDED : ஜன 01, 2026 04:09 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் 10வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2வது மாதிரி பொதுத்தேர்வு வரும் 3ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்து வருகின்றனர். 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான 10வது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு வரும் பிப்., 17ம் தேதி துவங்குகிறது. இதற்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக கடந்த டிச.,ல் முதல் மாதிரி தேர்வுகள் நடத் தி முடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2வது மாதிரி தேர்வு வரும் ஜன., 3ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை;
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 10வது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான 2வது மாதிரி பொதுத்தேர்வு கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.
10ம் வகுப்பிற்கு 3ம் தேதி மொழிப்பாடம், 5ல் ஆங்கிலம், 7ல் கணிதம், 9ல் அறிவியல், 12ல் சமூக அறிவியல், 13ம் தேதி உடற் கல்வி செயல்பாடு பயிற்சி, தகவல் தொழில் நுட்பம் தேர்வு நடைபெறும்.
பிளஸ் 2விற்கு ஜன., 3ம் தேதி தமிழ், உளவியல் பாடங்கள், 5ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், மனையியல், எலக்ட்டிரிக்கல் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் டெக்னாலஜி, ஆட்டோமோட்டிவ் ஆகிய பாடங்களுக்கும், 6ம் தேதி அலுவலக நடைமுறைகள் மற்றும் பயிற்சி, என்.சி.சி., வரலாறு, உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கும், 7ம் தேதி உயிரியல், வணிக படிப்புகள், ஜவுளி வடிவமைப்பு, குளிர்சாதனம், புவியியல், ஓவியம் ஆகிய பாடங்களுக்கும், 8ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், வெப் அப்ளிக்கேஷன், தகவல் நடைமுறைகள் ஆகிய பாடங்களுக்கும், 9ம் தேதி கணிதம், அரசியல் அறிவியல் பாடத்துக்கும், 12ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், அச்சுக்கலை, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாட ங்களுக்கும், 13ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கு ம் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுகள் காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

