/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்து
ADDED : ஜன 01, 2026 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்களுக்கு கவர்னர், முதல்வர் உ ள்ளிட்டோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “வரும் 2026- புதிய ஆண்டு புதுச்சேரி மக்களுக்கு ஏற்றத்தை தரும் ஆண்டாக, முயற்சிகளில் வெற்றி தரும் ஆண்டாக, அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை தரும் ஆண்டாகவும் அமைய வாழ்த்துகிறேன் என, தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வா ழ்த்து செய்தியில், மாநில மக்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டுவர இறைவனை பிரார்த்திக் கொள்வதோடு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், ஜான்குமார், திருமுருகன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், செல்வகணபதி எம்.பி., பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இ.கம்யூ., கட்சி மாநில செயலாளர் சலீம், லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தமிழக வெற்றிக் கழகம் சாமிநாதன், அகில இந்திய காங்., கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ், ஆர்.எல்.வி., மக்கள் முன்னேற்ற கழக தலைவர் வெங்கட்ராமன் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

