/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்' கத்தி வைத்திருந்த 5 பேர் கைது
/
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்' கத்தி வைத்திருந்த 5 பேர் கைது
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்' கத்தி வைத்திருந்த 5 பேர் கைது
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்' கத்தி வைத்திருந்த 5 பேர் கைது
ADDED : ஜன 01, 2026 04:08 AM
புதுச்சேரி: போலீசார் நடத்திய, த்ரிசூல் ஆபரேஷனில், வீட்டில் கத்தியை பதுக்கி வைத்திருந்த, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில், நேற்று முன்தினம் அதிகாலை ஆபரேஷன் த்ரிசூல் நடவடிக்கையில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில், போலீசார் ஈடுபட்டனர்.
அதில், குற்ற பின்னணி உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டில் கத்தி பதுக்கி வைத்திருந்த லாஸ்பேட்டையை சேர்ந்த அரிகேஷ் (எ) குஸ்கா சுனில், 19; சண்முகாபுரம் நவீன், 21; மூலக்குளம் அந்தோணிராஜ், 25; ரோடியார்பேட் சரண், 21; முருங்கப்பாக்கம் பன்னீர்செல்வம், 25, ஆகிய 5 பேரை, அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீசார், ஆயுதச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.