ADDED : அக் 25, 2026 02:30 PM

புதுச்சேரி: புதுச்சேரியின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும் வகையில், செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதன்முறையாக செயின்ட் பேட்ரிக் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டை வரும் 30, 31ம் தேதிகளில் நடத்த உள்ளது.
இன்று சிந்திப்போம் நாளை வழி நடத்துவோம் தலைப்பில் இம்மாநாடு, புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவர்களை ஒரே சர்வதேச விவாத மேடையில் ஒன்றிணைக்க உள்ளது. இது மாணவர்களை உலகத் தலைவர்களாக உருவாக்கும் ஒரு முயற்சி.
இம்மாநாட்டில் உலக நாடுகளின் துாதுவர்களாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
அவர்கள் உலகம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுக்கு தீர்வுகளை முன்வைத்து விவாதிக்க உள்ளனர். மாநாட்டில் 5 குழுக்களாக செயல்பட்டு விவாதம் நடத்த உள்ளனர்.
ஏற்பாடுகளை புனித பேட்ரிக் பள்ளியின் தாளாளர் பிரெட்ரிக் ரெஜிஸ், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா, ஒருங்கிணைப்பாளர் ரம்யா தேவராஜன், மாணவ பிரதிநிதிகள் விமல்ராஜ், லேகா, கவின், சமிக்ஷா, வீகன், சஹானா, தேஜஸ்வினி ஆகியோர் செய்து வருகின்றனர்.
