தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நவீன உள் விளையாட்டு மைதானம் அமைச்சர் ராஜசேகரன் ஆய்வு

நவீன உள் விளையாட்டு மைதானம் அமைச்சர் ராஜசேகரன் ஆய்வு

நவீன உள் விளையாட்டு மைதானம் அமைச்சர் ராஜசேகரன் ஆய்வு


UPDATED : நவ 19, 2026 05:42 PM

ADDED : நவ 19, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:42 PM ADDED : நவ 19, 2026 05:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: சேலியமேட்டில் நவீன உள் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக, அமைச்சர் ராஜசேகரன், மோகன்தாஸ் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.

ஏம்பலம் தொகுதியில், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என இளைஞர்கள், தொகுதி எம்.எல்.ஏ., மோகன்தாசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி, வளாகத்தில் நவீன உள் விளையாட்டு மைதானம் மற்றும் ஓடுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக, அமைச்சர் ராஜசேகரன், மோகன்தாஸ் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று பள்ளிக்கு சென்று நவீன உள் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இளைஞர்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் ராஜசேகர், இங்கு அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தும் வகையில், ஒரு நவீன உள் விளையாட்டு மைதானம் மற்றும் ஓடுதளம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளிடம் பேசிய அவர், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். உடன் விளையாட்டுத் துறை இணை இயக்குநர் வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள், ஊர் முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us