/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவறை மீது நவீன ரெஸ்டாரன்ட்: புதுச்சேரி நகராட்சி புது முயற்சி
/
கழிவறை மீது நவீன ரெஸ்டாரன்ட்: புதுச்சேரி நகராட்சி புது முயற்சி
கழிவறை மீது நவீன ரெஸ்டாரன்ட்: புதுச்சேரி நகராட்சி புது முயற்சி
கழிவறை மீது நவீன ரெஸ்டாரன்ட்: புதுச்சேரி நகராட்சி புது முயற்சி
ADDED : மே 17, 2025 11:28 PM

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி நகராட்சி ஏற்படுத்தி வருகிறது. அதையொட்டி, புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அனைத்து கட்டண கழிவறைகளும் வண்ணமயமான சுவரோவியங்களால் அழகுப்படுத்தி, சுகாதாரமாக பராமரித்து வருகிறது. சில கழிவறைகளை, சுவரோவியங்களுடன் 'செல்பி ஸ்பாட்டாக' அமைத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் முதல் முறையாக பழைய துறைமுக வளாகத்தில் உள்ள நகராட்சி கழிவறையின் மேற்புறத்தில் நவீன 'ரெஸ்டாரண்ட்' அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஏலம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி கொடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனம், பழைய துறைமுக வளாகத்தில் கடலை நோக்கி உள்ள கழிவறை மேல் தளம் மற்றும் கீழ் தளம் என, 1,500 சதுர அடி பரப்பளவில் தற்காலிக கட்டமைப்பில் நவீன பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் அமைக்கப்படுகிறது. இதில், கீழ் தளத்தில் உள்ள கழிவறைகளை சுத்தமாகவும் மற்றும் கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். கழிவறை அமைந்துள்ள கீழ் தளத்தை அழகிய மலர் செடிகளை வளர்த்து பசுமை சூழலில் பராமரிக்கப்படும்.
மேல் தளத்தில் ஒரே நேரத்தில் 40 பேர் அமர்ந்து கடல் அழகை ரசித்துக் கொண்டே உணவு அருந்தும் வகையில் இந்த ரெஸ்டாரன்ட் அமைக்கப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த ரெஸ்டாரன்ட் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதேபோன்று புதுச்சேரி பழைய சாராய ஆலை, டூப்லெக்ஸ் சிலை சதுக்கம், பழைய பஸ்நிலைய உழவர் சந்தை கழிவறைகள் மேல் நவீன ரெஸ்டாரன்ட் அமைக்க நகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.