/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலநாதர் கோவில் தேர் திருவிழா பாகூரில் இன்று விடுமுறை
/
மூலநாதர் கோவில் தேர் திருவிழா பாகூரில் இன்று விடுமுறை
மூலநாதர் கோவில் தேர் திருவிழா பாகூரில் இன்று விடுமுறை
மூலநாதர் கோவில் தேர் திருவிழா பாகூரில் இன்று விடுமுறை
ADDED : ஜூலை 09, 2025 12:48 AM
புதுச்சேரி : மூலநாதர் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி, பாகூர் கொம்யூனில் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக, தேர் திருவிழா இன்று (9ம் தேதி) நடக்கிறது. இன்று பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு பதில் வரும் 26ம் தேதி பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.