/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வெடித்த தார்மீக உரிமை சட்டப் புரட்சி: காலனி ஆதிக்கத்தில் காலணி அணிய தடை
/
புதுச்சேரியில் வெடித்த தார்மீக உரிமை சட்டப் புரட்சி: காலனி ஆதிக்கத்தில் காலணி அணிய தடை
புதுச்சேரியில் வெடித்த தார்மீக உரிமை சட்டப் புரட்சி: காலனி ஆதிக்கத்தில் காலணி அணிய தடை
புதுச்சேரியில் வெடித்த தார்மீக உரிமை சட்டப் புரட்சி: காலனி ஆதிக்கத்தில் காலணி அணிய தடை
UPDATED : ஆக 31, 2025 08:23 AM
ADDED : ஆக 31, 2025 12:17 AM
புதுச்சேரியின் வரலாற்றில் 1873 ஜனவரி 16ம் தேதி என்பது மிக முக்கியமான நாள். அன்றைய தினம் புதுச்சேரி நீதிமன்றம் ஒரு வித்தியாசமான சம்பவத்தை சந்தித்தது.
வழக்கறிஞரான பொன்னுத்தம்பி பிள்ளை ஒரு தமிழர். அவர் அன்றைய தினம் ஒரு வழக்கில் வாதாட சாவடி நீதிமன்றத்திற்குள் தலையில் தொப்பி, பூட்சுடன் நுழைந்தார். டக்... டக்... பூட்ஸ் சத்தத்துடன் நீதிமன்றத்திற்குள் அவர் நுழைவதை கண்ட நீதிபதி கடும் டென்ஷன் அடைந்தார்.
பொன்னுத்தம்பி பிள்ளையை பார்த்த நீதிபதி, 1842 பிப்ரவரி 7ம் தேதி ஆளுநர் பிறப்பித்த ஆணையின் 188-வது விதியின்படி நீதிமன்றத்திற்குள் இந்தியர்கள் தங்கள் சாதிக்குரிய ஆடைகளையே அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது நீங்கள் ஓர் இந்தியர் தானே; எதற்காக ஐரோப்பியர்கள் போல் காலணி அணிந்து நீதிமன்றத்திற்குள் வந்தீ ர்கள் என்று கோபத்தில் கொந்தளித்தார்.
ஒன்று காலணியை வெளியே விட்டு நீதிமன் றத்திற்குள் வாங்க; இல்லையெனில் அப்படியே போய்விடுங்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் பொன்னுத்தம்பி பிள்ளையோ சற்றும் மனம் தளரவில்லை. மதிப்பிற்குரிய பிரபு.. வழக்கறிஞர் சங்கத்தில் நான் உறுப்பினர். எனவே மற்ற வழக்கறிஞர்கள் போன்று உடையணிந்து கோர்ட்டிற்கு வந்துள்ளேன். இதில் வெள்ளையர் கருப்பர், பிரெஞ்சியர், இந்தியர் என்ற பேதம் எங்கே வந்தது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தானே என்று வாதிட்டார்.
ஆனால் நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. கோபத்தில் முறைத்து பார்த்தார். பொன்னுத்தம்பி பிள்ளை தனது வாதத்தினை தொடர்ந்தார். இந்திய கலாசாரத்தில் காலணி அணியும், காலுறையும் அணிவது இல்லை. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆ னால் நான் அந்த பழைய நடைமுறைகளை களைந்துவிட்டு பிரெஞ்சு கலாசாரத்திற்கு மாறிய நிலையில், ஐரோப்பியர்கள் போன்று அந்த உரிமையும், தகுதியும் எனக்கு வந்துவிட்டது அல்லவா என்று அழுத்தமாக வாதத்தை பதிவு செய்தார்.
அதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நீதிபதி, ஆளுநரின் ஆணையை அவமதித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையை குலைத்தாலும் பொன்னுத்தம்பி பிள்ளையின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்தார். மேலும் பத்து நாட்களுக்கு நீதிமன்றத்திற்குள் வரக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உள்ளூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் ஒன்றும் நடந்துவிடவில்லை. அடுத்து பாரிஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் பிரான்சின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ழு ய்ல் கொதேன் ஆஜராகி வாதாடி, பொன்னுத்தம்பி பிள்ளைக்கு வெற்றி தேடி தந்தார். பிரெஞ்சு வழக்கறிஞர்களுக்கு சமமாக இந்திய வழக்கறிஞர்கள் நடந்து கொள்வது குற்றம் அல்ல என்று தீர்ப்பு கிடைத்தது.
இந்தியர்கள் தங்களது சாதிய அடையாளங் களை துறந்து ஐரோப்பிய கலாசாரத்திற்கு மாறும்போது அதை ஆ தரிக்க வேண்டும். இத்தகைய தார்மீக புரட்சியை வரவேற்க வேண்டும். அதை பொன்னுத்தம்பி கடைபிடிக்க முன் வரும்போது ஆதரிக்காமல் அவர் மீது நடவடிக்கை எடுத்த ஆளுநர் பாரோனை, பிரெஞ்சு அ மைச்சரும் கண்டித்தார்.
அதன் பிறகு புதுச்சேரி நீதிமன்ற நீதிபதிகள் சாமி முதலியார், அண்ணாசாமி இருவரும் முந்தைய நீதிபதியின் தீர்ப்பினை ரத்து செய்து, பொன்னுத்தம்பி பிள்ளைக்கு நீதி கிடைக்க செய்தனர். என்ன தான் இந்தியர்கள், பிரெஞ்சியர்கள் கலாசாரத்திற்கு மாறி இருந்தாலும், அவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்களில் கூட உரிமைகள் பல நிலைகளில் மறுக்கப்பட்டுள்ளது.
காலனி ஆதிக்கத்தில் காலணி அணிய கூட சம உரிமை மறுக்கப்பட்டுள்ளதை, புதுச்சேரியில் வெடித்த இந்த தார்மீக உரிமை சட்டப் புரட்சி வெளிச்சம்போட்டு காட்டு கிறது.
அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...