நன்னெறி கதைகள் காணொளி தயாரிப்பு போட்டி பரிசளிப்பு விழா
நன்னெறி கதைகள் காணொளி தயாரிப்பு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜூலை 25, 2026 05:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வித் துணை ஆய்வாளர் அலுவலகம் வட்டம் ஒன்றின் சார்பில், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான நன்னெறி கதைகளை காணொளியாக தயாரிக்கும் போட்டி பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நடந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் வட்டம் ஒன்றின் கீழ் பணி புரியும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளி துணை ஆய்வாளர் வட்டம் 1 அனிதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினரான பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர் ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், மாணவர்களின் நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் வகையில் காலை பேரவையில் நேர்மறை உறுதிமொழிகளை பின்பற்றும் 20 பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய அளவில் துாய்மை பள்ளிக்கான முதல் பரிசை வென்ற காலப்பட்டு குப்பம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.
