/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரையில் கொசுமருந்து தெளிக்கும் பணி
/
உழவர்கரையில் கொசுமருந்து தெளிக்கும் பணி
ADDED : நவ 22, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை, சமூக ஆர்வலர் சசிபாலன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் மழைக் காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், உழவர் கரை தொகுதி முழுதும் நோய் தொற்று பரவாமல் இருக்க, சமூக ஆர்வலர் சசிபாலன், கம்பன் நகரில் கொசு மருந்து தெளிக்கும் பணியை, தனது சொந்த செலவில் துவக்கி வைத்தார்.
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.