sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு


ADDED : ஏப் 28, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில் ஏலச்சீட்டு பிடித்து பலரிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த தாய், மகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அய்யங்குட்டிப்பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வி (எ) ஆச்சி; பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர், தனது மகள் ராமலட்சுமியுடன் இணைந்து, அப்பகுதியில் 1 லட்சம், 1.50 லட்சம் என, மாத ஏலச்சீட்டு பிடித்து வந்தார்.

இவர்களிடம் தர்மபுரி, கல்கி நகரை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சங்கர், 41; என்பவர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தார். கடந்த மார்ச் 21ம் தேதி செல்வி மற்றும் அவரது மகள் ஏலச்சீட்டு பணத்துடன் மாயமாகினர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சங்கர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதில், மாயமான செல்வி, ஏலச்சீட்டு பிடித்து தன்னிடம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.

மேலும், அப்பகுதியில் பலரிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், செல்வி மற்றும் ராமலட்சுமி மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us