/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெடி விபத்தில் தாய் பலி :மகன் உட்பட 2 பேர் கைது
/
வெடி விபத்தில் தாய் பலி :மகன் உட்பட 2 பேர் கைது
ADDED : ஜன 15, 2026 07:40 AM

புதுச்சேரி: வெடி விபத்தில் தாய் இறந்த சம்பவத்தில், அவரது மகன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்தவர் பாண்டியன், 43. இவர், தன் மாமியார் சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரீனா, 51, என்பவருடன் ஜன., 11ல் திருவக்கரையில் பூண்டு பட்டாசு பயன்படுத்தி காட்டு பன்றிகளை வேட்டையாடி உள்ளார்.
பின், மீதம் இருந்த பூண்டு பட்டாசுகளை ஸ்கூட்டரில் வைத்து, வில்லியனுாருக்கு திரும்பியபோது, கூடப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே பூண்டு வெடி வெடித்ததில், ஜெரீனா உடல் சிதறி உயிரிழந்தார். வில்லியனுார் போலீசார் விசாரித்தனர்.
அதில், அனுமதியின்றி வெடி மருந்து வைத்திருந்ததாக ஜெரீனாவின் மகன் விஜய், 22, தொள்ளாமூரை சேர்ந்த வேல்முருகன், 25, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

