தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கைக்குழந்தையை விட்டு தாய் தற்கொலை

கைக்குழந்தையை விட்டு தாய் தற்கொலை

கைக்குழந்தையை விட்டு தாய் தற்கொலை


UPDATED : நவ 12, 2026 12:26 AM

ADDED : நவ 12, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:26 AM ADDED : நவ 12, 2026 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு மாத கைக்குழந்தை விட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைனார்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகவி, 26; பி.டெக்., பட்டதாரி. இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு கடந்தாண்டு சென்னையைச் சேர்ந்த அரவிந்தராஜ், 30, என்பவருடன் திருமணம் நடந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதிகள் புதுச்சேரியில் உள்ள சினேகவி வீட்டிற்கு வந்தனர். தம்பதிகள் இடையே சிறு சிறு பிரச்னைகள் வரும் பின் சரியாகி விடும். அந்த வகையில் கடந்த 9ம் தேதி அரவிந்தராஜ் மனைவியை பார்த்துவிட்டு சென்னை சென்றார். இந்நிலையில் நேற்று இரவு அவரது அறைக்கு சென்ற சினேகவி மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us