ADDED : நவ 12, 2026 12:06 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் டிஜிட்டல் டிசைனர் வங்கி கணக்கில் ரூ. 1.28 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை, தாகூர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 52; கிராபிக்ஸ் டிசைனர். நேற்று முன்தினம் இவரது மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கிக்கணக்கை ஆய்வு செய்தார்.
அப்போது அவரது 4 வங்கிக்கணக்கில் இருந்து 1 லட்சத்து 28 ஆயிரத்து 476 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதரன் கொடுத்த புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
